Friday, December 11, 2009

பேசாத காதல்

அவன் கடிகாரம் பர்த்தான் அவள் வரும் நேரம்
தன்னை சரிபார்த்தான், புன்னகை வரவழைத்தான்
பேருந்து வரும் நேரம் நெருங்க அவள் வந்தாள்
சிரித்தாள் பக்கத்தில் வந்து நின்று அவனும்
சுகமா?கேட்டவளுக்கு இவன் பதில் புன்னகை
முதல் முறையாய் அவள் கேட்டதது
அவளும் சிரித்தாள் நெடுநாள் சந்திப்பு பேருந்து வரும்வரையில்தான்
திரும்பவும் கேட்டாள் குளிர் அல்லவா? இருந்தும் பிடிக்கும், உனக்கு?
புன்னகையே பதிலாகியது இவனிடம்
பேருந்து வர ஏறியவள் திருப்பி பார்த்தாள் 'வரவில்லையா?'
மறு புன்னகையோடு இல்லையென்றது இவன் தலை
பேருந்து புறப்பட வான் பார்த்து முதன் முதலாய் சபித்தான்
என்னையேன் பேசமுடியாமல் படைத்தாய்?
பேருந்து போனது அவன் காதலும் இவன் நடக்கத்துவங்கினான்
வான் அழுதது அவனுக்காய்.

0 பின்னூட்டங்கள்: