Tuesday, December 8, 2009

இனியாவது அவளுக்காய் 




ஒரு நிழல் ஆடி அடங்கிய பொழுதில் காற்று வீசி கலைத்தது 
இல்லாமல் போகின்ற நியாயம் உறைத்தது 
இன்னும் சிலகாலம் மட்டுமே என்றும் இல்லை என்றும் 
அவள் தனித்துபோனாள் என்பதை உலகம் சொல்லியே அவளுக்கு விளங்கவேண்டியிருந்தது 
நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லியே மரங்கள் பூக்கள் போட்டன 
எப்போதும் வரும் வாசம் மட்டும் வரவேயில்லை 
தினம் மாறும் மனோபாவம் திரும்பவும் கேட்டது 
மாற்று மாற்று என்று 
அவள் நடந்துபோனாள் இன்றாவது அந்த மர நிழலில் அமருவோம் என்று 
ஏனோ அவனுக்கு மட்டும் எப்போதுமே 
அம்மரநிழல் இருக்கை பிடித்திருந்திருக்கவில்லை.




0 பின்னூட்டங்கள்: