Wednesday, June 16, 2010

செழிப்புற செய்வாய்..




தன்னிலையெய்தா தாம் பெரிதென்பார்
முன்னுள்ளோர் தாமே முடிவிலை என்பர்
என்னுள்ள சிறிவும் பெற்றது என்னே
நற்பண் செறிந்த நயமான தமிழே.

எந்தையும் அம்மையும் எப்புலனூடே
சிந்தையுள் தன்னை செப்புற செழிக்க‌
தன்னையும் தமிழையும் தனக்குள்ளே
செதுக்கி பின்னே வந்த பதராம் என்னுள்
நன்னுற செலுத்தி நலம் தந்தாரே.

இன்றும் என்றும் என்னுள் இருக்கும்
எனதருமை மொழி செப்பிய செந்தமிழ்
ஆசானவனுக் காவதென்ன நன்றி மட்டுமோ
நாயாய் ஆகேனோ நன்றாய் வளர்பேனோ
நின் தந்த தமிழை என் தாயை.

அறிந்தும் ஆரியர் அறிவிலா பேடியர்
அழிக்க நினைந்த‌ அற்புத தமிழை
அன்புற வளர்போர் எம் அகம் அருகில்
நன்னுற நம் தமிழ் நலமே வாழ ஆவன‌
செய்ய அவதாரம் வருமோ அற்பனே அறிவாய்.

உன்னையும் என்னையும் உலகுக்காட்டி
உணர்வையும் உறவையும் பகன்ற‌ செந்தமிழ்
தன்னை சிந்தையில் இருத்தி செழிப்புற செய்வாய்
சிறப்புற வாழ்வாய்.

1 பின்னூட்டங்கள்:

மதுரை சரவணன் said...

//அழிக்க நினைந்த‌ அற்புத தமிழை
அன்புற வளர்போர் எம் அகம் அருகில்
நன்னுற நம் தமிழ் நலமே வாழ ஆவன‌
செய்ய அவதாரம் வருமோ அற்பனே அறிவாய்.//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்