Friday, June 18, 2010

ராவணன், உண்மையில் அவன் ராமன்..

விக்ரம்‍- அசத்தல், ஜஸ்- அழகு, கார்த்திக் - தாவல்,பிரபு -பிளரல், காமிரா- அசத்தல், இயற்கை‍ -அழகு. மொத்தத்தில் நவீன இராமாயணம்.



மணி ரத்னம், விக்ரம், ஜஸ், கார்த்திக், பிரபு,பிரித்திவிராஜ் மற்றும் ரஹ்மான் என்பதோடு ஆரம்பித்த என விழி இணைய புகைப்படங்களிலும்,துணுக்குசெய்திகளிலும் மென்மேலும் ஆவலோடு எதிர்பார்க்கவைத்த ஒரு திரைப்படம் ராவணன்.

முதல் திரையிடல் என்பததோடு முன்கூட்டிய திரையிடலை தவற விட நான் மட்டும் என்ன விதிவிலக்கு. திரை விரிகிறது வீரா பாடலோடு ஆனால்
சில முன்‍-பின் காட்சிகள் வந்தபின்.எங்கும் எதிலும் தண்ணீர்தான் படமாக்கலில் குளிரும் தெரிகிறது, நமக்கும் குளிர்கிறது. அலைபாயுதேயில் வண்ணங்களில் காட்டிய மணி ரத்னம் இதில் மலை, மலைசார்ந்த காடு, அருவி, தண்ணீரீ என்று இயற்கையாக பல புதிய எழில்கொங்சும் இடங்களில் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர்களான‌மணிகண்டன் மற்றும் சந்தோஸ் சிவன் இருவருக்கும் நன்றிகள் சில காட்சிகளில் எப்படி நடிகர்கள் கடினப்பட்டிருக்கிறார்கள் என்பதில் ஒளிப்பதிவாளர்கள் அதற்க்கு மேல் கஸ்டப்பட்டிருப்பதும் புரிகிறது.
பின்ணணி மற்ற படங்களை ஒப்பிடும்போது இசையில் பெரிதாக சொல்லமுடியாவிட்டாலும் நன்றாயிருக்கிறது.வசனம் சுகாசினி மீண்டும் வருகை நன்று.



படத்தின் கதை பற்றி சொல்ல ஒன்றுமே இல்லையென்றாலும் கதைக்குள் இருக்கும் கதை பற்றித்தான் நான் சொல்ல வருகிறேன்.
இராவணன் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஆனால் சீதையின் கதை? சீதையின் மனசும் அது அலைபாயும் நெருடலும் ராமன் எவ்வளவு சுயநலவாதி என்பதிலும், ராவணந்தான் உண்மையான ராமன் என்பதிலும் இருக்கும் சூட்சுமமே ராவணன் திரைப்படம்.


இணைய ராமாயண விவாதங்களுக்கு போக நான் வரவில்லை, அவை நீண்டு செல்லும். அடக்கப்படும் மக்களின் வலி எப்படி வேதனைதரும் என்பதை சொல்ல விளைகிறார் மணி ரத்னம், அதில் ஓரளவு வெற்றியும் காண்கிறார் என்னைப்பொறுத்தவரையில்
(கவனிக்க, என்னைப்பொறுத்தவரையில்)
கொம்னிசிய கருத்துக்கள் கொண்ட ஒரு மணி ரத்னம் படம் நான் பார்த்த நினைவில்லை, ஒரு காப்பரேட் எடுத்த கொம்னிசிய படம்
இது. காதல் சேர்த்து,பாசம் போட்டு, பரிதாபம் காட்டி,கொல்கிறது.


கதையில் மக்களுக்காக போராடும் ராவணன் எனும் வீரா அம்மக்களால் ஒரு வீரனாகவே பார்க்கப்படுகிறார்.இடையில் வரும் ஒரு காட்சியில் ஒரு மனிதனைப்பற்றிய பலரின் வெவ்வேறு கருத்துக்கள் பற்றிய ஒரு விமர்சன பார்வை பார்க்கவைக்கிறார் இயக்குனர் அதுவும் அம்மக்களாலேயே சொல்லவைக்கிறார்.
இது ஈழ போராட்டத்தை ராவணன் மூலம் சொல்லும் கதை மட்டுமல்ல,
 வட இந்தியாவில் ஒரு சமூகத்துக்கு நடக்கும் அநீதியும் அதன்
 வெளிப்பாடும், அடக்கப்பட்ட மக்களின் போராட்டமும், பண்டோராவும் இன்னும் பலவும். ஒரு சாராருக்கு ராவணன் நல்லவன், ஒரு பகுதியினருக்கு பயம்காட்டுபவன், ஒரு பகுதிக்கு பாசமானவன், ஆக இங்கே பிரபாகரன் அவர்கள் என் மனதில் தோன்றுவது வியப்பில்லை.



ஒரு வகையில் ராவணன் படம் பிரபாகரன் கதை போல இருக்கிறது. சீதை மட்டும் முற்று முழுதாக மாற்றப்பட்டு இருக்கிறாள் என்றால் இலையென்பதே உண்மை. ஆனால் அவள் ஏதும் செய்யமுடியாத கலாச்சார,சமூக கட்டுக்குள் இருந்து கடைசியில் வெளியே வரும்போது இன்னும் பல கருத்துக்கள் தோன்றுகின்றன.
கடத்தப்படும் ஒருவர்/ள் குறிப்பிட்ட காலப்பகுதியில்
கடத்தப்பட்டவனி(ளி)ல் காதலில் விழும் சந்தர்ப்பம் நிகழ்கிறது இங்கே
ஆனால் அவை சொல்லமுடியாத ஒரு திக்கில் கதையும், ஜஸ்ஸும் பயணம் செய்கின்றனர்.ஆக‌ தெளிவற்ற நிலையாயினும் கடைசியில் திருப்பம் காதல் போல தோற்றமளிக்கிறது.




கடத்தி சுடச்செல்லும்போதும் ஏற்படும் நிகழ்வால் மனசு முழுக்க காதல்படுகிறார் ராவணன், அதன் பின் " சாதல் பற்றிய பயம் இல்லாத ஒருத்தியை எப்படி சாகடிக்கச்செய்வது" என்பதும், பயம் என்னும் உணர்வு இல்லாமல் என்னை பயம் காட்டுகிறாள் என்பதும் பல கருத்துக்களை சொல்லின. ஒருவனின் பய உணர்வு அற்ற நிலைக்கு எதிரியால் என்ன
செய்ய முடியும்?ஏனெனில் பயம் காட்டி கொல்வதன்
மூலம் கிடைக்கும் உணர்வு இல்லாத கொல்லல் எப்படி கசக்கும் அல்லது
 பயன் தரும் என்பதும் வித்தியாச அணுகல்கள்தான்.



இராமாயண சீதை எப்படி இருந்திருப்பாள் என்பதை தொட்டுச்செல்கிறது ராவணன். தன்னைத்தொட எத்தனிக்காத ராவணனின் மேல் வரும் மரியாதை காதலாகியிருக்கலாம் என்பதும் ஒரு கருத்தாக வைக்கப்டுகிறது. தன் கணவன் கடவுள் மாதிரி என்று சொல்லும்போது அதற்க்கு வீரா சொல்லும் பதில்
அல்லது கேள்வி அருமை. அவதார புருசந்தான் கடவுள், அத்தனை யோக்கியமானவனா? என்பதும், கடவுளை நான் காணவேண்டும் என்பதும், உன் கடவுள் சிவப்பாக, அழகாகத்தான் இருப்பார் கடவுள் என்பதே புனிதமான, அழகானவர்தானே அவரைப்பார்க்க‌வேண்டும் என்று சொல்லி நான் குப்பை, காட்டான் என்பதிலும் ராமனாகிய பிருத்விராஜ் எப்படி மாறப்போகிறார் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர்.



இதிலே கடவுள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை என்பதும் ராவணன் படம் சொல்லும் சேதி, இங்கே நான் சொல்ல வருவது கடவுள் என்பது அழகாக,சிவப்பாக இருக்கவேண்டும் என்பதில்லை அவன்
ஒரு காட்டானாகவும் கறுப்பாகவும் இருக்கலாம் ஆனால் உள்ளத்தில் யோக்கியவனாக இருக்கவேண்டும் என்பதே. அதிலும் மேட்டுக்குடியால் எதிர்க்கப்படுகின்ற இந்த இனத்தின் எல்லா வேலைகளும் மேட்டுக்குடி கண்ணுக்கு பயங்கரமானதாகவே தெரியும்,உலகுக்குக்காட்டப்படும் என்று சொல்வதிலும் கொங்சம் அதிகார வர்க்கத்தை தட்டிப்பார்க்கிறது படம்.



இருவேறு கோணத்தில் சொல்லப்படும் இந்த பயங்கரவாதம்(ராவணன்,ராமன்) இது ஒரு தேடல்,காட்டுவாசி மக்களின் கொலை,கற்பழிப்பு இது..அது என செல்கிறது.
சரி சீதை மற்றும் சீதாயணம் பற்றி(நன்றி பிரசாந்தன் அண்ணா, நல்ல தலைப்பு.)
கதையின் ஆரம்பத்தில் கடத்தப்படும் ராகினியின் முன் வீரா ஒரு வில்லந்தான். ஏன் கடத்தினான் என்பதன் பின் அவன் ஒரு நல்ல,கெட்டவன், பின் கடத்தி ஒன்றும் செய்யாமல்விட்டபின்னும், ராமனின் கேள்விநெருப்பின் பின் ராவணனின் தெளிவாக்கத்தின் பின்னும் காதல் மிளிர்கிறது கவனிக்க காதல் மெல்ல பூக்கிறது.


இது இராமாயணத்திலும் நடந்திருக்க‌லாம் என்பதே இயக்குனர் எண்ணம் என எண்ணுகிறேன் எப்படி என்றால் இராமாயணத்தில் சீதை தீக்குள் இறங்கும்போது என்ன நினைத்திருப்பாள் என்பதன் புதுவடிவத்தை கடைசி காட்சியில் ராகினியின் மூலமாக தெரியவைக்கிறார் மணி ரத்னம். தன் நலமே, நல்ல பெயரெடுக்கும் மற்றும் மாறாத வெறி கொண்ட அழிக்கும் குணமும் கொண்டு 'எப்படியாவது' வீராவை
பழிவாங்க/கொல்ல ராகினிக்கு வார்த்தைத்தீ வைக்கிறார் தேவ் என்னும்
 (ராமன்) பிருத்விராஜ். இங்கே தன்னை புனிதனாக தன்சார்ந்தவர்களுக்கு காட்டிகொள்ள்வதன் முக்கியத்துவமே தெரிகிறது சீதையின் புனிதத்தன்மை பற்றிய அக்கறை எல்லாம் காட்டப்படவில்லை.ஆக அவளின் மனசை புண்படுத்தினாலும் தன் இலக்கை அடையவேண்டும் என்ற ஆசை வாட்டுகிறது.இராவணன் மீளளித்த சீதைக்குபின்பும்
தனது பழிதீர்த்தலே முக்கியம் என்பதை தேவ் மூலம் காட்டுகிறார் இயக்குனர். கடைசியில் "இப்படி எல்லாம் கேட்டாரா தேவ்" என்னும்போது தான்
(சீதை)ராகினிக்குத்தெரியாமலே வஞ்சிக்கப்பட்டதை உணரும் ராவணன் தன்னைக்கொல்ல அழைக்கிறான் தேவ்வை. ஆக இங்கே ராமன் (தேவ்) ராவணனாகிறான்.



தன்னை(ராகினியை) ராவணன் அவதூறாக சொல்லிவிட்டானே என்று
தேவ் சொல்லும்போது அவர் அப்படிப்பட்டவர் இல்லையென்றும்,
என்னை பாருங்கள் நீங்கள் நம்பவில்லையா என்றும் ராகினி சொல்வது கவனிக்கத்தக்கது. பிறகு வீரா சொல்லியிருப்பானோ என்று தன்னை
தேவ்வுக்கு நிரூபிக்க வீரா இருக்குமிடம் வரும் ராகினி தான் ஒரு
கருவியாக உருவகிக்கப்பட்டதற்கு வேதனைப்படும் ராகினியின்
எண்ணங்கள் சரியாக காட்டபடாமலே முடிவை ரசிகர் கைகளில் விடுகிறார் மணி ரத்னம்.இங்கே ராகினி, தேவ்வோடு சேர்ந்தாளா இல்லியா
என்பதே அது. இங்கே கதையின் தொனியில் அவள் சேரப்போவதில்லை என்பதில் முடிவதாக என் எண்ணம் சுரக்கிறது. மற்றொருவர் ஒருவர்
சொல்லும்போது அவரைப்பற்றிய அறிவில்லாமல் அப்படியே நம்புவதும்
 பின் அறிந்தபின் நல்லெண்ணம் கொள்வதும் இயல்புதான். இதுதான்
ஈழ போராட்டத்திலும் நடந்தது, அந்த ஒருவர் உலகநாடுகள், இந்தியா,
இலங்கை மற்றும் பக்கச்சார்பான ஊடகங்கள் என எடுத்துக்கொள்ளலாம். அதாவது ராமன் சார்ந்த குழுவினர் எழுதிய இராமாயணம் போல.
ஆனால் ராவணன் படம் இராவணன் சார்ந்த பகுதியினரின் கதையை தொட்டுச்செல்கிறது.
முக்கியமான பல காரணிகள் இப்படத்திலே காட்டப்ப்டுகின்றன அவை....

தொடர்புபட்ட இன்னொரு பதிவு,(ராவணனல்ல‌)
http://www.facebook.com/note.php?note_id=232198161317

தொடரும்....

Read Original :http://www.facebook.com/note.php?note_id=430361646317

1 பின்னூட்டங்கள்:

AkashSankar said...

நல்ல விமர்சனம்...