Monday, June 28, 2010

பேயனாய் பிதற்றல்கள்...


தன்னிலை பெரிதென்றே தாந்தோன்றியாய்
தன் தகவும் அறியா தன் கனவும் தெரியா
கோடிட்ட கொடியில் போட்ட கருப்புச்சட்டை கொண்டு
தேடித் தேடி வீதியெங்கும் திரிந்த உம்மனமும் அறியா

மதிகெட்டு மனமற்று வீதிமகளிர் பின்போய் மரிப்பாயோ மறவா
மதமற்று மாந்தரெல்லாம் மகிழ்வாய் வாழ புதுப்புத்தன் தேடி
திடமில்லா சிந்தைதேடி சிதறுவாய் நீ
சீர்கொண்ட சிலவும் சிலையாக...

முத்திரை பதிந்த இடம் எது என்றால் இதயம் என்று
நான் சொன்ன நகர்பேருந்தொன்றில் நீ சிரிக்க நான் சுவைத்த
நின்சிரிப்பின் பின்நான் கெட்டகேடு அறிவாய் கிளியே..

புன்சிரிப்பின் பித்தனாகி பேயனாகி பின்வரும் முன்வரும்
பிழையுமறியா தென்கோடிக் கடையொன்றில் தீர்த்தம் வாங்க‌
தற்செயலாய் நீபார்த்த தீகொடிது இல்லையென்ற போர்ப்பார்வை
பொசுக்கி பஞ்சாய் என்னை கருக்கி பறக்கவிட்டாய் காத்தில்..

நல்சொல் சொல்லென சொன்நண்பனும் இன்னும் வாங்கியளிக்க‌
நானழிய நீபார்க்கா விட்டகன்ற நின்பாதம் கடலழியும் கண்ணழியா என் கண்ணழியா..
போ என்றுஞ்சொல்லேன் புழுவாய் பார்த்தென்னை பழித்தாய் நல்லாயிரு..

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

nice kavithai