Monday, July 19, 2010

சில சிதறல்கள்...






அந்த‌ மாலையில் உன்னைக்காண காலையிலிருந்தே பரபரத்திருந்தேன் நான்.
நீ வந்த மாலையில் மழையாய் நீ வர செடியாய் நான். 

நனியாமல் நீ நின்ற அந்த பூவரமரம் விசிலடித்தது...

எங்கோ குழந்தை சிரித்தது.. பெண் வீதிதாண்டினாள்.. 
குறுக்கேபோன என்னை ரோட்டோரத்தவன் கை நீட்டினான், 
நான் சில்லறை போட சிரித்தாய் நீ பிச்சையானேன் நான்...


துளிகள் போட்ட கோலத்தில் நீ போட்ட கோலமழிய மழை வெறுத்தேன் நான் அன்று. 
அதே மழையில் மறுநாள் நீ ஆட மழை சிரித்த்து என்மேல், என்னுள்ளே தூறல் தொடங்கியது, 
நீ ஆட ஆரம்பித்தாய் கூடவே நானும்...


நீ கேட்ட இல்லாத ஒன்றிற்காய் ஏழு மைல் போனேன் நான்
இருக்கின்ற எனக்காய் எட்டு அடி வைத்து வரமாட்டாயா நீ?



கண்மூடி தொலைகின்ற கணப்பொழுதில் உன்முகம் கண்ட என் கார் ஃப்ரேக் அடித்தது
 என் கால் விறைத்திருந்தது அப்போது...



ஏதோ எழுத நினைத்து நான் தட்டிய எழுத்துருக்கள் எல்லாம்
உன் பெயர் காட்டின கணணித்திரையில்
 என் விரல்களுக்குள்ளுமா வந்துவிட்டாய் நீ உன் பெயர் பொறிக்க...

2 பின்னூட்டங்கள்:

Gayathri said...

"நீ கேட்ட இல்லாத ஒன்றிற்காய் ஏழு மைல் போனேன் நான்
இருக்கின்ற எனக்காய் எட்டு அடி வைத்து வரமாட்டாயா நீ?


கண்மூடி தொலைகின்ற கணப்பொழுதில் உன்முகம் கண்ட என் கார் ஃப்ரேக் அடித்தது
என் கால் விறைத்திருந்தது அப்போது...


ஏதோ எழுத நினைத்து நான் தட்டிய எழுத்துருக்கள் எல்லாம்
உன் பெயர் காட்டின கணணித்திரையில்
என் விரல்களுக்குள்ளுமா வந்துவிட்டாய் நீ உன் பெயர் பொறிக்க..."

மிக மிக அருமை...ரசித்தேன்...நன்றி

ராசராசசோழன் said...

// ரோட்டோரத்தவன் //

கவிதை அருமை... ஆங்கில வார்த்தையை கடன் வாங்கி...தமிழாய் ஆக்கி விட்டீர்கள்...அருமை....